கோவிட்-19 தடுப்பூசியான Covaxin-ஐ மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை!

கோவிட்-19 தடுப்பூசியான Covaxin-ஐ  மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை!

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 4லட்சத்து 2ஆயிரத்து 637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 7 ஆயிரத்து 518 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 56 லட்சத்து 48 ஆயிரத்து 728 பேர் குணமாகியுள்ளனர்.

கோவிட்-19 தடுப்பூசியான Covaxin-ஐ  மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் நாளை தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,48,318லிருந்து 5,66,840ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,822ஆக அதிகரித்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்க 16,893ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் இதற்கான மருந்து இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

கோவிட்-19 தடுப்பூசியான Covaxin-ஐ  மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை!

இந்நிலையில் புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் தயாரித்து வரும் கோவிட்-19 தடுப்பூசியான  Covaxin-ஐ மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்துள்ளது. முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு வெற்றி கிடைத்ததால் அடுத்த கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.