புதிய வகை கொரோனாவையும் கோவாக்சின் அழிக்கும் – அமெரிக்க நிபுணர் தகவல்!

 

புதிய வகை கொரோனாவையும் கோவாக்சின் அழிக்கும் – அமெரிக்க நிபுணர் தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் அதிக பாதிப்புகள், அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. முன்பை விட ஆக்சிஜன் சிலிண்டர்களும் அதிகமாகத் தேவைப்படுகின்றன. இதனால் நாடே சின்னாபின்னாமாகிக் கிடக்கிறது.

புதிய வகை கொரோனாவையும் கோவாக்சின் அழிக்கும் – அமெரிக்க நிபுணர் தகவல்!

இரண்டாம் அலைக்கு இந்தியாவில் இரட்டை உருமாற்றமடைந்த கொரோனா (பி 1617) தான் காரணமா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் முதலில் தோன்றிய வைரஸைக் காட்டிலும் தற்போது உருமாற்றமடைந்தது பரவும் வேகமும் அதன் வீரியமும் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதை முன்வைத்து தான் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வருவதற்கு இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதற்கு தடை விதித்துள்ளன. இருப்பினும் இந்தியாவிற்குத் தேவையான உதவிகள் அளிக்கவும் முன்வந்திருக்கின்றன.

புதிய வகை கொரோனாவையும் கோவாக்சின் அழிக்கும் – அமெரிக்க நிபுணர் தகவல்!

இதற்கு நடுவே உருமாற்றமடைந்த கொரோனாவை கோவாக்சின் தடுப்பூசி கட்டுப்படுத்துமா என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் நல்ல முடிவு கிடைத்திருந்தது. வைரஸ் உருமாற்றமடைந்தாலும் தனது அடிப்படையான ஸ்பைக் புரதத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் கோவாக்சின் தடுப்பூசி உருமாற்றமடைந்த கொரோனாவையும் கட்டுப்படுத்தும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) வெளியிட்டிருந்தது.

புதிய வகை கொரோனாவையும் கோவாக்சின் அழிக்கும் – அமெரிக்க நிபுணர் தகவல்!

தற்போது இந்த ஆய்வு முடிவுக்கு வலு சேர்க்கும் விதமாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் புகழ்பெற்ற தொற்றுநோய் நிபுணரான அந்தோணி ஃபாஸியும் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். உலகளவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்துப் பேசிய அவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி குறித்தும் ஆய்வு செய்ததாகக் கூறினார். அதனை ஆய்வுசெய்தத்தில் இந்தியாவில் தற்போது உருவாகியிருக்கும் உருமாற்றமடைந்த கொரோனாவையும் சேர்த்து அழிக்கும் ஆற்றல் கோவாக்சின் தடுப்பூசியிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.