“கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது” : பரிசோதனை குறித்து மருத்துவர் சவிதா வர்மா தகவல்!

“கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது” : பரிசோதனை குறித்து மருத்துவர் சவிதா வர்மா தகவல்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் உடன் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசியான Covaxin-ஐ மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது.

“கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது” : பரிசோதனை குறித்து மருத்துவர் சவிதா வர்மா தகவல்!

முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு வெற்றி கிடைத்ததால் அடுத்த கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி Covaxin மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான சோதனை முயற்சிகள் நாடு முழுவதும் 12 இடங்களில் நடைபெற்று வருகிறது.

“கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது” : பரிசோதனை குறித்து மருத்துவர் சவிதா வர்மா தகவல்!
இந்நிலையில் பிஜிஐ மருத்துவ பல்கலைக்கழகத்தின்  பரிசோதனை தலைமை மருத்துவர் சவிதா வர்மா, 375 தன்னார்வலர்கள் மீதான கோவாக்சின் பரிசோதனை பாதுகாப்பானது என்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.