9 மாவட்டங்களில் செயல்பட தொடங்கியது கீழமை நீதிமன்றங்கள்!

 

9 மாவட்டங்களில் செயல்பட தொடங்கியது கீழமை நீதிமன்றங்கள்!

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் நீதிமன்றங்கள் மூடப்பட்டன. முக்கிய வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதன் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கீழமை நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதனையடுத்து பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கோரிக்கையின் படி தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

9 மாவட்டங்களில் செயல்பட தொடங்கியது கீழமை நீதிமன்றங்கள்!

மேலும், 5 வழக்கறிஞர்கள் மட்டுமே அறைக்குள் இருக்க வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்தவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த நடைமுறை மறு ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன் படி அந்த 9 மாவட்டங்களிலும் கீழமை நீதிமன்றங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.