ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உதயநிதி வைக்க வேண்டாம் – நீதிமன்றம்

 

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உதயநிதி வைக்க வேண்டாம் – நீதிமன்றம்

மண்ணச்சநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்பு படுத்தி பேசினார். அந்த வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமனும் அவரது மகனும் ஈடுபட்டுள்ளனர் நேற்றும் முடிந்தால் என் மீது வழக்கு போடுங்கள் என்றெல்லாம் பேசியிருந்தார். தமிழகத்தையே அதிர வைத்த அந்த வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்பு படுத்தி பேசியது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உதயநிதி வைக்க வேண்டாம் – நீதிமன்றம்

கடுப்பான பொள்ளாச்சி ஜெயராமன் நீதிமன்றம் வரை சென்றார். தன்னை பற்றி அவதூறாக உதயநிதி பேசியதால் ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்த போது, உதயநிதி பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உதயநிதி வைக்க வேண்டாம் – நீதிமன்றம்

இதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும் போது பொள்ளாச்சி ஜெயராமனை அதில் தொடர்பு படுத்தி பேசுவது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம் என உதயநிதிக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.