தீபாவளி பரிசு பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் வாங்க கூடாது என எச்சரிக்கை!

தீபாவளி பரிசு பொருட்களை  நீதிமன்ற ஊழியர்கள் வாங்க கூடாது என எச்சரிக்கை!

தீபாவளிக்கு காவல்துறையிடமிருந்து நீதிமன்ற ஊழியர்கள் பரிசு பொருட்களை வாங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 14 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. சாதி, மதத்தை கடந்து மக்கள் பலகாரங்கள் செய்து பட்டாசு வெடித்து இந்த நாளை கொண்டாடி மகிழ்வர். அத்துடன் பல்வேறு பரிசு பொருட்களும் தீபாவளி பண்டிகையொட்டி வீடு தேடி வரும்.

தீபாவளி பரிசு பொருட்களை  நீதிமன்ற ஊழியர்கள் வாங்க கூடாது என எச்சரிக்கை!

குறிப்பாக அரசு பணியாளர்கள், காவல்துறை, நீதித்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் என பலருக்கும் எக்கசக்க பரிசு பொருள்கள் வந்து குவியும். அதேபோல் காவல்துறையை சேர்ந்த சிலர் நீதித்துறை ஊழியர்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவதை நட்பு ரீதியாகவோ அல்லது வழக்கமான் ஒன்றாகவோ வைத்திருப்பர்.

தீபாவளி பரிசு பொருட்களை  நீதிமன்ற ஊழியர்கள் வாங்க கூடாது என எச்சரிக்கை!

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நீதிமன்றப் பணியாளர்கள் போலீசிடம் அன்பளிப்பு பெறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பரிசு தரக்கூடாது என தூத்துக்குடி எஸ்பிக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது. தீபாவளி அன்பளிப்பு பெறக்கூடாது என ஊழியர்களுக்கு மதுரை நடுவர் முதன்மை நீதிமன்ற நீதிபதியும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.