• February
    24
    Monday

Main Area

Main



விஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதார குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி

vijay mallya
vijay mallya

டெல்லி: விஜய் மல்லையா தப்பியோடிய குற்றவாளி என பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்திய வங்கிகள் பலவற்றிலும் ரூ.9 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்த லண்டன் நீதிமன்றம், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த உத்தரவை எதிர்த்து 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் நீதிமன்றம் மல்லையாவுக்கு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், தொழில் அதிபர் விஜய் மல்லையா தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. தப்பியோடியவர் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது சொத்துக்களை அரசால் பறிமுதல் செய்ய முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.