பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

 

பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க தடை கோரி உயர்நீதிமன்றத்தில் சரண்யா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

அவர் அளித்த மனுவில், முறையான டிஜிட்டல் கட்டமைப்பு வசதி இல்லாததால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சவால்கள், இடையூறுகள் இருப்பதால் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த தடை விதிப்பதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பான ஆன்லைன் கல்விக்கு என்ன விதிமுறைகள் இருக்கிறது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.