எதிர்ப்புக்குரல்கள் எழுந்தால் தான் தமிழ் சேர்க்கப்படுமா? நீதிபதிகள் சரமாரி கேள்வி!

எதிர்ப்புக்குரல்கள் எழுந்தால் தான் தமிழ் சேர்க்கப்படுமா? நீதிபதிகள் சரமாரி கேள்வி!

தொல்லியல் படிப்பில் தமிழ் முதலிலேயே சேர்க்கப்படாதது ஏன்? என மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

உத்திர பிரதேசத்தில் செயல்பட்டு வரும் தொல்லியல் துறை நிறுவனத்தின் கீழ், தொல்லியல் மேற்படிப்புக்கான விண்ணப்பம் அண்மையில் வெளியானது. அதில் முன்னுரிமை தரப்படும் பட்டியலில் தமிழைத் தவிர மற்ற அனைத்து மொழிகளும் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய நிலையில், தொல்லியல் படிப்பில் தமிழ் சேர்க்கப்பட்டது.

எதிர்ப்புக்குரல்கள் எழுந்தால் தான் தமிழ் சேர்க்கப்படுமா? நீதிபதிகள் சரமாரி கேள்வி!

இந்த நிலையில் தொல்லியல் படிப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ் முதலிலேயே சேர்க்கப்படாதது ஏன்? எதிர்ப்புக்குரல்கள் எழுந்தால் தான் தமிழ் சேர்க்கப்படுமா? எதன் அடிப்படையில் பாலி, பாரசீக மொழிகள் தொல்லியல்துறை அறிவிப்பில் சேர்க்கப்பட்டது? அறிவிப்பு வெளியிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி சரமாரியாக கேள்விகளை முன் வைத்தனர்.

எதிர்ப்புக்குரல்கள் எழுந்தால் தான் தமிழ் சேர்க்கப்படுமா? நீதிபதிகள் சரமாரி கேள்வி!

மேலும், இது மொழிகள் உணர்வோடு தொடர்புடையவை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பழமையான மொழிகள் பற்றி அக்.18க்குள் தொல்லியல் துறை பதில் தர உத்தரவிட்டனர்.