‘பாலியல் தொல்லை என பரப்புரை’ முதல்வர் பழனிசாமிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

 

‘பாலியல் தொல்லை என பரப்புரை’  முதல்வர் பழனிசாமிக்கு நீதிமன்றம்  நோட்டீஸ்!

கோவை திமுக நிர்வாகி தொடர்ந்த வழக்கில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர் வேலுமணிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘பாலியல் தொல்லை என பரப்புரை’  முதல்வர் பழனிசாமிக்கு நீதிமன்றம்  நோட்டீஸ்!

கடந்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி கோவை திமுக நிர்வாகியான சூலூர் ஏ. ராஜேந்திரன் சென்னையிலிருந்து கோவைக்கு செல்லும் போது, நீரிழிவு பிரச்சனை காரணமாக ரயிலில் மேல்படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, பெண் ஒருவர் மீது தடுமாறி விழுந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையில் வாய்மொழியாக புகார் அளிக்க, தான் தவறான நோக்கத்துடன் அவர் மீது விழவில்லை, எனக்கு நீரழிவு பிரச்சினை இருப்பதால் அவசரமாக இறங்கியதாக கூற அதை ஏற்றுக்கொண்ட அப்பெண் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாமென கூறி சென்றுள்ளார். இருப்பினும் 15 நாட்களுக்கு பிறகு சூலூர் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

‘பாலியல் தொல்லை என பரப்புரை’  முதல்வர் பழனிசாமிக்கு நீதிமன்றம்  நோட்டீஸ்!

இந்த சூழலில் சூலூர் ராஜேந்திரன் ரயில் பயணத்தின் போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என தேர்தல் பரப்புரையின் போது, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவதூறாக பேசி வருவதாக சூலூர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரில் பதிவான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இருப்பினும் தன்னை பற்றி அவதூறாக பேசிய முதல்வர், அமைச்சர் நஷ்டஈடாக ஒருகோடி தரவேண்டும் என்று சூலூர் ராஜேந்திரன் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை, நீதிபதி வி.பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கு ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.