இ-பாஸுக்கு லஞ்சம் வாங்கினால் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுங்கள்: நீதிபதிகள் காட்டம்

இ-பாஸுக்கு லஞ்சம் வாங்கினால் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுங்கள்: நீதிபதிகள் காட்டம்

தமிழகத்தில் இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட மிக முக்கிய காரணங்களுக்காக மட்டுமே இபாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த காரணங்களுக்காக கூட பாஸ் வழங்கப்படுவதில்லை என மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இதனால் இபாஸ் முறையை நீக்க வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு பதில் அளித்த முதல்வர், இபாஸ் முறையை இப்போது நீக்க முடியாது என்றும் அதற்கு மாறாக இபாஸ் வழங்கும் நடைமுறையை எளிமையாக்குவதாகவும் தெரிவித்தார். இதனிடையே சில இடங்களில் இபாஸ் பெற அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.

இ-பாஸுக்கு லஞ்சம் வாங்கினால் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுங்கள்: நீதிபதிகள் காட்டம்

இந்த நிலையில் இ-பாஸுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்திலும் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திருப்பூரில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள மாணவிகளை மீட்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.