டாஸ்மாக்கில் ரசீது, விலைப்பட்டியல் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

டாஸ்மாக்கில் ரசீது, விலைப்பட்டியல் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

தமிழக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதும், உரிய ரசீது வழங்காததும் வாடிக்கையாகி விட்டது. இதனை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் பிரியா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு அளித்தார். அந்த மனுவில் மதுபாட்டில்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.10 அதிகமாக விற்கப்படுவதாக குறிப்பிட்டிருந்த அவர், கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்குமாறும் கம்பியூட்டர் ரசீது வழங்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தார்.

டாஸ்மாக்கில் ரசீது, விலைப்பட்டியல் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

அந்த மனு அண்மையில் விசாரணைக்கு வந்த போது, கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றவர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை பட்டியலை வைக்க வேண்டும் என்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்கும் மதுபானத்திற்கு உரிய ரசீது வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

டாஸ்மாக்கில் ரசீது, விலைப்பட்டியல் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மேலும் ரசீது வழங்குவதற்கான நகல் கொண்ட பதிவேட்டை முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், திடீர் ஆய்வு செய்து முறையாக பின்பாற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.