அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்ற உத்தரவு!

 

அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்ற உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்துச் செல்கிறது. பாதிப்பு அதிகமாக இருந்த பகுதியான சென்னையில் தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பினும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா பாதிப்பால் அடிக்கடி அமைச்சர்கள் மற்றும் முதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இது போன்ற கூட்டங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும் உரிய முன்னெச்சரிக்கையை பின்பற்றவில்லை என புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது.

அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்ற உத்தரவு!

இது குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த மனுவில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி பின்பற்றவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், முதல்வர் அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க இயலாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர்கள், முதல்வர் கலந்து கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.