சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

 

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிஸ் சிறையிலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்களிடையே எதிர்ப்பை கிளப்பி பூதாகரமாக வெடித்தது. இதனையடுத்து இது தொடர்பாக தூத்துக்குடி எஸ்.பி பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. மேலும், இந்த சம்பவத்தை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் கடை அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இதனிடையே இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதில், தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி காணொளி வாயிலாக ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதன் பேரில், அதிகாரிகள் இரண்டு பேரும் ஆஜராகினர். அப்போது, லாக் அப்பில் நடக்கும் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து இதற்கான வழிகாட்டுதல்களை அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் பிரேதப் பரிசோதனையை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது. மேலும், இருவர் உயிரிழந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜூன் 26-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.