‘பள்ளி மாணவர்களுக்கு அம்மா உணவகங்களில் சத்துணவு’ – அரசு பதிலளிக்க உத்தரவு!

 

‘பள்ளி மாணவர்களுக்கு அம்மா உணவகங்களில் சத்துணவு’ – அரசு பதிலளிக்க உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு அம்மா உணவகங்கள் அல்லது சமுதாய சமையற்கூடங்கள் மூலம் தினமும் சத்துணவு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வைரஸ் பாதிப்பால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்த சத்துணவுக்கு பதிலாக தற்போது மாணவர்களுக்கு உலர் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சத்துணவால் பயனடைந்துவரும் 43 லட்சம் மாணவர்களுக்கு அம்மா உணவகங்கள் அல்லது சமுதாய சமையற் கூடங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவை தினமும் வழங்குவது தொடர்பான திட்டத்தை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

‘பள்ளி மாணவர்களுக்கு அம்மா உணவகங்களில் சத்துணவு’ – அரசு பதிலளிக்க உத்தரவு!

அவர்கள் அளித்துள்ள மனுவில், 1982 ஆம் ஆண்டு முதல் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 43 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு சமைக்கப்படாத உணவு பொருட்களை வழங்குவதற்கு பதிலாக தினமும் உணவு வழங்கும் திட்டத்தை அரசு கொண்டுவர அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவது குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரசுக்கு அறிவுறுத்தியது. மேலும் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.