எத்தனை கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

எத்தனை கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருந்து மக்களை காக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு சென்ற கைதிக்கு கொரோனா இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளுக்கு சென்ற 4 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

எத்தனை கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

புழல் சிறையில் மொத்தமாக 800க்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனை பெற்று வரும் நிலையில், பயிற்சிக்காக மற்ற மாவட்ட சிறைக் கைதிகள் சென்னைக்கு வருவது வழக்கம். அதன் படி இங்கு வந்த 5 பேருக்கும் கொரோனா உறுதி உறுதி செய்யப்பட்டதால் மற்ற கைதிகளுக்கும் கொரோனா பரவியிருக்குமோ என்று கேள்வி எழுந்துள்ளது. அதனால் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் என முதற்கட்டமாக 90 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், மொத்தம் 30 கைதிகளுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதனிடையே புழல் சிறையில் இருந்து மற்ற சிறைகளுக்கு சென்ற கைதிகளுக்கும் கொரோனா பரவியிருக்குமோ என்று கேள்வி எழுந்துள்ளது.

எத்தனை கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்நிலையில் இது தொடர்பாக எழுந்த வழக்கில், தமிழக சிறைகளில் எத்தனை கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேர் குணம்டைந்துள்ளனர்? என்பது குறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.