‘செமஸ்டர் முடிவுகளை வெளியிடுங்கள்’.. அண்ணா பல்கலை கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

 

‘செமஸ்டர் முடிவுகளை வெளியிடுங்கள்’.. அண்ணா பல்கலை கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா பாதிப்பினால் 5 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் தேர்வெழுத முடியாத சூழல் நிலவியதால், இறுதி ஆண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்கள் எல்லாருக்கும் செமெஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட அந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகின. ஆனால், அண்ணா பல்கலை கழகத்தில் தேர்வு கட்டணத்தை செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.

‘செமஸ்டர் முடிவுகளை வெளியிடுங்கள்’.. அண்ணா பல்கலை கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், மாணவர்கள் தேர்வு கட்டணத்தை செலுத்தினாலும் செலுத்தவில்லையென்றாலும் செமஸ்டர் முடிவை வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும், முடிவை வெளியிடாதது குறித்து தமிழக அரசும் அண்ணா பல்கலை கழகமும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.