மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை : பதில் தர ஆணை!

 

மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை : பதில் தர ஆணை!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. கொரோனா பொதுமுடக்கத்தின் போது தனது உயிரையும் பொருட்படுத்தாது மக்களை காக்க போராடிய போலீசார், சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை : பதில் தர ஆணை!

இதுவரை 70 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் நிலையில், அவர்களைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 50 வயதுக்கு குறைவாக இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அதற்கு பிறகு தான், இணை நோய் இல்லாத அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக மத்திய. மாநில அரசுகள் மூன்று வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.