பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசியை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

 

பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசியை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் காசி (26) சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ படித்து விட்டு, மீண்டும் நாகர்கோவிலுக்கே வந்துள்ளார். அப்பாவின் கறிக்கடையை பார்த்துக் கொண்டிருந்த அவர், எப்போது பார்த்தாலும் சோஷியல் மீடியாக்களை உபயோகப்படுத்திக் கொண்டே இருப்பாராம். அதாவது கட்டுடல் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக பெண்களுக்கு மாய வலையை விரித்துள்ளார் காசி. அதில் சிக்கும் பெண்களிடம் பேசி, பழகி ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு அவர்களிடம் காசு கேட்டு மிரட்டி, பணம் பறித்துள்ளார்.

பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசியை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

இதையே தொழிலாக செய்து வந்த காசியின் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. குறிப்பாக பொருளாதார வசதி இருக்கும் பெண்களையே குறி வைத்து காசி, வலை விரித்த இவர் மீது கன்னியாகுமரி எஸ்.பியிடம் ஒரு பெண் மருத்துவர் புகார் அளித்தார். அதே போல, கல்லூரி மாணவி ஒருவரும் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், கடந்த மாதம் 24 ஆம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கல்லாரி மாணவி அளித்த புகார் பற்றி விசாரணை நடத்த காசியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு காவல்துறை சார்பில் நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் காசியை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளனர். ஏற்கனவே காவல்துறையினர் காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், 2ஆவது முறையாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.