• February
    27
    Thursday

Main Area

Main



முட்டுக்காடு கடற்கரையோரம் கட்டப்பட்டுள்ள பங்களாவை இடிக்க நீதிமன்றம் உத்தரவு! 

சொகுசு பங்களா
சொகுசு பங்களா

முட்டுக்காடு கடற்கரையோரம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 5 சொகுசு பங்களாக்களுக்கான மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை துண்டிக்கவும், ஒரு சொகுசு பங்களாவை இடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டுமானங்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியில்  சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டிருக்கிறது என்றும் கடற்கரையிலிருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் கட்டப்பட்டுள்ள இந்த சொகுசு பங்களாக்கள் அப்புறப்படுத்த வேண்டியவை என்றும் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

முட்டுக்காடு கடற்கரை

கேரளா மாநிலம் மரடுவில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை பின்பற்றாமல் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டதை சுட்டிகாட்டிய நீதிபதிகள், முட்டுக்காடு கடற்கரையோரம் விதிகளை மீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.  மேலும் இடிப்பதற்கான செலவையும் பங்களாவின் உரிமையாளர்களே ஏற்று கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.