டாஸ்மாக்கை திறந்ததால் பொதுநலன் ஏதும் இல்லை : நீதிபதிகள் கருத்து

 

டாஸ்மாக்கை திறந்ததால் பொதுநலன் ஏதும் இல்லை : நீதிபதிகள் கருத்து

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் திறக்கப்படாத நிலையில், பல இடங்களில் கள்ளச்சாராயம் சட்ட விரோத மது விற்பனை உள்ளிட்டவை அதிகரித்து வந்தது. அதுமட்டுமில்லாமல், கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்ட அரசுக்கு கடும் நிதி நெருக்கடி நிலவியது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனை எதிர்த்து பலர் உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்த நிலையில், அரசின் முடிவில் தலையிட முடியாது என டாஸ்மாக்கை மூட நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

டாஸ்மாக்கை திறந்ததால் பொதுநலன் ஏதும் இல்லை : நீதிபதிகள் கருத்து

பல நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மீண்டும் திறக்கப்பட்ட போது, அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. அந்த வருவாய் மூலம் அரசு மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், தேனி அன்னை சத்யா நகர் பகுதியில் மறுவாழ்வு மையம் அருகே இருக்கும் டாஸ்மாக்கை மூடக்கோரி கோபால் என்பவர் பொதுநல மனுதாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், டாஸ்மாக்கை திறந்ததால் பொதுநலன் ஏதும் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, அரசு நிர்ணயம் செய்த விலையில் தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா? டாஸ்மாக்கில் கூட்டம், தனிமனித இடைவெளியை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினர்.

மேலும் தேனி டாஸ்மாக் கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள். வழக்கு விசாரணையை செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.