அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆணைக்கு தடை விதித்த நீதிமன்றம்!

 

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆணைக்கு தடை விதித்த நீதிமன்றம்!

அமெரிக்க அதிபரின் முடிவுகள் தடாலடியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் ஒவ்வொரு முடிவுகளும் அதிர்ச்சியைத் தருவதாகவே இருந்தன.

நவம்பர் மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆணைக்கு தடை விதித்த நீதிமன்றம்!

அமெரிக்க நாட்டில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை செய்ய வேண்டும் எனில் கட்டாயம் ’எச் 1 பி’ விசா எடுத்தாக வேண்டும். எச் 1 பி விசா கொடுப்பதற்கு தற்காலிகமாக அதிபர் ட்ரம்ப் தடை விதித்து ஆணை பிறப்பித்திருந்தார். அதற்கு காரணமாக, உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்குவதற்கு என்று கூறியிருந்தார். இதனால், வெளிநாட்டைச் சேர்ந்த பலருக்கும் அதிர்ச்சியானது.

அதிபர் ட்ரம்ப், அமெரிக்கர்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவே இந்த அறிவிப்பு விடுத்திருக்கிறார் என்று விமர்சகர்கள் கூறினார். ட்ரம்பை எதிர்த்து நிற்கும் ஜோ பிடன் தான் அதிபரானால் இந்த எச் 1 பி விசாவில் ட்ரம்ப் விதித்திருக்கும் தடையில் மாற்றம் கொண்டு வரப்படும் எனக் கூறியிருந்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆணைக்கு தடை விதித்த நீதிமன்றம்!

இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் எச் 1 பி தடை முடிவை எதிர்த்து தொழில் கூட்டமைப்பினர் கலிபோர்னியா நீதிமன்றத்தை நாடியிருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிபர் ட்ரம்ப் விதித்த தற்காலிக தடைக்கு தடை விதித்து தீர்ப்பளித்தனர்.

நீதிமன்ற தீர்ப்பு நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும். ஆனால், அது ட்ரம்ப்க்கு எதிராகவா… ஆதரவாகவா என்பது முடிவுகளே தெரிவிக்கும்.