ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு.. விசாரணையை மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

 

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு.. விசாரணையை மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியதாக, ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணையை மே 15ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2014-ம் ஆண்டு தானேயில் உள்ள பிவாண்டியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், மகாத்மா காந்தியை கொலை செய்ததற்கு பின்புலத்தில் ஆர்.எஎஸ்.எஸ். அமைப்புதான் இருந்தது என்று குற்றம் சாட்டினார். இதன் எதிரொலியாக, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் என்பவர், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறியதாக பிவாண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு.. விசாரணையை மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்
ஆர்.எஸ்.எஸ்.

பிவாண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது. கடந்த 2018ம் ஆண்டில் இந்த வழக்கு தொடர்பாக அந்த நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். அப்போது, தான் எந்த தவறும் செய்யவில்லை. இந்த குற்றச்சாட்டு புனையப்பட்டது மற்றும் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று ராகுல் காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அன்று ராகுல் காந்தியின் வக்கீல் நாராயன் அய்யர், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் கோரிக்கை வைத்தார். இதற்கு நீதிபதி சம்மதம் தெரிவித்தார்.

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு.. விசாரணையை மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்
கோட்சே, மகாத்மா காந்தி

அதேசமயம், வழக்கு தொடர்ந்து ராஜேஷின் வக்கீல் பி.பி. ஜெய்வ்த் வாதிடுகையில், சில ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டியது இருப்பதால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை வரும் மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.