உத்தரபிரதேசத்தில் வீட்டு வாடகை தராத தம்பதி சுட்டுக்கொலை !!

 

உத்தரபிரதேசத்தில் வீட்டு வாடகை தராத தம்பதி சுட்டுக்கொலை !!

உத்தர பிரதேச மாநிலம் அசாம்கர் மாவட்டம் சிட்டி கோட்வாலி போலீஸ் நிலைய எல்லையில் வீட்டு வாடகை தரவில்லை என கார் பாகங்கள் வியாபாரி மற்றும் அவரது மனைவி வீட்டு உரிமையாளரின் மகனால் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக நில உரிமையாளர் ராகேஷ் ராய் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம்கர் காவல் கண்காணிப்பாளர் திரிவேணி சிங் தெரிவித்தார்.
கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பலர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் வீட்டு வாடகை தரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் மனிதநேயம் மிக்க வீட்டு உரிமையாளர்களால் குடியிருப்புவாசிகள் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் பல இடங்களில் வீட்டு வாடகை செலுத்தவிலை என்றால் வீட்டை காலி செய்யுமாறு கூறுவதைத்தான் நாம் பார்த்து வருகிறோம்.

உத்தரபிரதேசத்தில் வீட்டு வாடகை தராத தம்பதி சுட்டுக்கொலை !!

உத்தர பிரதேச மாநிலம் அசாம்கர் மாவட்டம் சிட்டி கோட்வாலி போலீஸ் நிலைய எல்லையில் உள்ளது அஹிராபுலா பகுதி. இங்கு ராய் என்பவருக்கு சொந்தமா இடத்தில் ஆட்டோ உதிரி பாகங்கள் கடை நடத்திவரும் சஞ்சய் என்பவர் அவருடைய இடத்தில் வீடு வாடகை எடுத்து தங்கி உள்ளார். ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதமாக சஞ்சீவ் வாடகை செலுத்தவில்லை. எனவே ஆத்திரம் அடைந்த ராய் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது குத்தகைதாரர் சஞ்சீவ் சிங்குடன் சண்டையிட்டார். வாடகை தருவதற்கு அவகாசம் கேட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த ராய் சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் சரிந்து விழுந்த இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இதையடுத்து நில உரிமையாளர் ராகேஷ் ராய் மற்றும் அவரது மகன் மீது வழக்கப்பதிந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.