ரீல் விட்டு ரியல் எஸ்டேட் பண்ணும் தம்பதியினர் -பணத்தை பெற்றுக்கொண்டு பிளாட் தராமல் ஏமாற்றி பல கோடி மோசடி…

ரீல் விட்டு ரியல் எஸ்டேட் பண்ணும் தம்பதியினர் -பணத்தை பெற்றுக்கொண்டு பிளாட் தராமல் ஏமாற்றி பல கோடி மோசடி…

ஒரு கணவன், மனைவி தங்களை தந்தை ,மகள் என்று ரீல் விட்டு பிளாட் விற்ப்பதாக கூறி பலரிடம் பலகோடி மோசடி செய்த விவகாரத்தால் அவர்களிடம் பணம் கொடுத்த பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

ஹரியானாவின் குருக்ஷேத்ராவைச் சேர்ந்த அனில் ஜெயின் என்பவர் , தனது மகள் பூர்ணிமா ஜெயின் ஒரு எமார் எம்ஜிஎஃப் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அவருக்கு அந்த நிறுவனத்தில் டெல்லியில் உள்ள காமன்வெல்த் கிராமத்தில் சலுகை விலையில் ஒரு பிளாட் அவருக்கு கொடுத்திருப்பதாகவும் ,அதை தாங்கள் உங்களுக்கு விற்க இருப்பதாக கூறி பாங்கே பிஹாரி சோத்தாலியா என்பவரிடம் 2.83கோடி ரூபாய் பணம் வாங்கிக்கொண்டனர் .
பிறகு கூடிய விரைவில் டெல்லியிலிருக்கும் பிளாட்டை உங்களுக்கு கொடுக்கிறோம் என்று ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது .ஆனால் ஒப்பந்தம் போட்டு பல நாட்களாகியும் அவர்கள் சோத்தாலியாவுக்கு அந்த பிளாட்டை கொடுக்கவில்லை .இதனால் அவர் எமார் எம்ஜிஎஃப் நிறுவனத்தினை தொடர்பு கொண்டு கேட்டபோது ,தாங்கள் அப்படி யாருக்கும் காமென்வெல்த் கிராமத்தில் சலுகை விலையில் எந்த ஊழியருக்கும் பிளாட் கொடுக்கவில்லை என்று கூறினர் .

ரீல் விட்டு ரியல் எஸ்டேட் பண்ணும் தம்பதியினர் -பணத்தை பெற்றுக்கொண்டு பிளாட் தராமல் ஏமாற்றி பல கோடி மோசடி…

இதனால் தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் மிகவும் மன வேதனையடைந்தார் .
பின்னர் சோத்தலியா டெல்லி போலீசில் அவர்கள் மீது புகார் அளித்தார் .போலீஸ் விசாரணையில் அந்த ஆணும் பெண்ணும் உண்மையில் தந்தையும் ,மகளும் கிடையாது அவர்கள் கணவன்-மனைவி என்று கண்டறிந்தனர் ,மேலும் அவர்கள் இதை போல பலரை ஏமாற்றிய விஷயமும் தெரிய வந்தது . மேலும் நடந்த விசாரணையில் , அந்த தம்பதியினர் ஹரியானாவின் குருக்ஷேத்ராவில் தங்கியிருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.அதன் பிறகு போலீசார் தனிப்படை அமைத்து அதுல் கக் என்ற அனில் ஜெயின் கைது செய்யப்பட்டார். இவரது மனைவி பூர்ணிமா ஜெயின் தலைமறைவாக உள்ளார்.

ரீல் விட்டு ரியல் எஸ்டேட் பண்ணும் தம்பதியினர் -பணத்தை பெற்றுக்கொண்டு பிளாட் தராமல் ஏமாற்றி பல கோடி மோசடி…