கே.வி.குப்பத்தில் கொரோனா பாதிப்பால் தம்பதி உயிரிழப்பு!

 

கே.வி.குப்பத்தில் கொரோனா பாதிப்பால் தம்பதி உயிரிழப்பு!

வேலூர்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் கொரோனா பாதிப்பால் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அண்ணா நகரை சேர்ந்தவர் பிச்சாண்டி (57). இவர் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி செல்வி (46). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சமீபத்தில் பிச்சாண்டிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கே.வி.குப்பத்தில் கொரோனா பாதிப்பால் தம்பதி உயிரிழப்பு!

அவரை தொடர்ந்து, செல்விக்கும் (46) தொற்று உறுதியானதால், வேலூர் அரசு மருததுவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிச்சாண்டி, வீட்டு தனிமையில் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவரை உறவினர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிச்சாண்டி இறந்த சில மணி நேரத்திலேயே அவரது மனைவி செல்வியும் வேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பால் கணவன் – மனைவி அடுத்தடுத்து உயிரிழந்ததால் அவர்களது 3 குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.