“நாட்டின் நலன் கருதி எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்” – பிரதமர் மோடி பேச்சு!

“நாட்டின் நலன் கருதி எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்” – பிரதமர் மோடி பேச்சு!

தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

“நாட்டின் நலன் கருதி எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்” – பிரதமர் மோடி பேச்சு!

இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 145 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

“நாட்டின் நலன் கருதி எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்” – பிரதமர் மோடி பேச்சு!

இந்நிலையில் குஜராத்தில் சர்தார் பட்டேல் பிறந்த நாள் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “‘மண்ணும் இமயமலை எங்கள் மலையே’ என்ற பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதை நாட்டின் நலன் கருதி தவிர்க்க வேண்டும். புல்வாமா தாக்குதலின் போது பாதுகாப்பு படையினர் செய்த தியாகத்தைப் பற்றி வருத்தப்படாமல் அரசியல் செய்தனர். பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். கொரோனா வைரஸை எதிர்க்கும் முயற்சியில் ஒட்டுமொத்த தேசமும் தன்னுடைய கூட்டு சக்தியை நிரூபித்துள்ளது. 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் கஷ்மீர், புதிய வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறி வருகிறது” என்றார் .