குன்னூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து- சிறுவன் உள்பட மூவர் படுகாயம்!

 

குன்னூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து- சிறுவன் உள்பட மூவர் படுகாயம்!

நீலகிரி

குன்னூரில் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது, எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதில் மூவர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், அங்கு பூட்டியிருந்த வீடு ஒன்றில் கண்ணன் (30), அபு (26) ஆகியோர் வெடி மருந்துகள், கம்பிகளை கொண்டு நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

குன்னூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து- சிறுவன் உள்பட மூவர் படுகாயம்!

அப்போது, எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. இந்த விபத்தில் கண்ணன், அபு மற்றும் வீட்டின் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 10 வயது சிறுவன் ஶ்ரீநாத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி சுரேஷ், குன்னூர் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் ஆகியோர், மருத்துவமனைக்கு நேரில் சென்று கண்ணன், அபு ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக நாட்டு வெடி தயாரிக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.