உலக சுகாதார அமைப்பின் மீது விசாரணை நடத்த நாடுகள் ஒப்புதல்… உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராகிறார் ஹர்ஷ் வர்தன்….

 

உலக சுகாதார அமைப்பின் மீது விசாரணை நடத்த நாடுகள் ஒப்புதல்… உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராகிறார் ஹர்ஷ் வர்தன்….

சீனாவில் உருவாகி உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச தொற்று நோயான கோவிட்-19 அறிவிப்பை தாமதப்படுத்தியதாக உலக சுகாதார அமைப்பு மீது முன்னணி நாடுகள் குற்றச்சாட்டின. கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு முறையாக செயல்பட்டு இருந்தால் தற்போது உலக அளவில் ஏற்பட்டு இருக்கும் பாதிப்பை தடுத்திருக்க முடியும். சீனாவின் ஊதுகுழலாக அந்த அமைப்பு செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பின் மீது விசாரணை நடத்த நாடுகள் ஒப்புதல்… உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராகிறார் ஹர்ஷ் வர்தன்….

இந்நிலையில் உலக சுகாதார சபையின் ஆண்டு கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தக்கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து நிறைவேற்ற இந்தியா உள்பட 62 நாடுகள் திட்டமிட்டு இருந்தன, அதன்படி, நடந்த தொடங்கிய உலக சுகாதார அமைப்பின் குழு கூட்டத்தில் திட்டமிட்டப்படி உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தக்கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் ஆண்டு கூட்டம்  வரலாற்றில் முதல் முறையாக காணொளி வாயிலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்து கொண்டார். நாளை மறுநாள் (மே 22) உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக ஹர்ஷ் வர்தன் பொறுப்பேற்கிறார். இந்த பதவியில் அவர் ஒராண்டு இருப்பார். உலக சுகாதார சபையின் முடிவுகள் மற்றும் கொள்கைகளை அமல்படுத்துவது மற்றும் அதன் பணிகளை எளிதாக்குவது ஆகியவை நிர்வாக குழுவின் முக்கிய பணியாகும்.