நாளை வாக்கு எண்ணிக்கை…திடீர் ஆலோசனையில் தேர்தல் ஆணையம்!

 

நாளை வாக்கு எண்ணிக்கை…திடீர் ஆலோசனையில் தேர்தல் ஆணையம்!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

நாளை வாக்கு எண்ணிக்கை…திடீர் ஆலோசனையில் தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. அடுத்த ஆட்சி யாருடையது? யார் தமிழகத்தின் அடுத்த முதல்வர்? என்ற பல கேள்விகளுடன் ஒட்டுமொத்த தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. இந்த முறை சட்டமன்ற தேர்தல் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என ஐந்துமுனை போட்டி நிலவியது. இதில் திமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என பல நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. இருப்பினும் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சியின் இரட்டை தலைமை சூளுரைத்து வருகிறது.

நாளை வாக்கு எண்ணிக்கை…திடீர் ஆலோசனையில் தேர்தல் ஆணையம்!

இந்நிலையில் தமிழகம் உட்பட ஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.