பா.ஜ.க.வா?.. மக்கள் கூட்டணியா?.. மக்கள் யார் பக்கம்?.. காஷ்மீரில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை..

பா.ஜ.க.வா?.. மக்கள் கூட்டணியா?.. மக்கள் யார் பக்கம்?.. காஷ்மீரில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை..

ஜம்மு அண்டு காஷ்மீரில் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் எண்ணப்பட உள்ளது.

2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதன் பிறகு முதல் முறையாக ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த நவம்பர் 8, டிசம்பர் 1,4,7,10,13,16 மற்றும் 19ம் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

பா.ஜ.க.வா?.. மக்கள் கூட்டணியா?.. மக்கள் யார் பக்கம்?.. காஷ்மீரில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை..
பா.ஜ.க.

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி உள்பட மொத்தம் 7 கட்சிகள் அடங்கிய மக்கள் கூட்டணி ஒரு அணியாக போட்டியிட்டது. அதேசமயம் பா.ஜ.க.வும், காங்கிரசும் தனித்தனியாக போட்டியிட்டன. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று மக்கள் கூட்டணி பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல் மக்கள் கூட்டணிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையிலான நேரடி மோதலாக கருதப்படுகிறது.

பா.ஜ.க.வா?.. மக்கள் கூட்டணியா?.. மக்கள் யார் பக்கம்?.. காஷ்மீரில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை..
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் எண்ணப்பட உள்ளது. மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை 9 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வந்தால், காஷ்மீர் மக்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்ளனர் என்று கருதலாம். அதேசமயம் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றால் காஷ்மீர் மக்கள் சிறப்பு அந்தஸ்துக்கு ஆதரவாக உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.