ஊராட்சி ஒன்றிய தலைவரை சிறைபிடித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

 

ஊராட்சி ஒன்றிய தலைவரை சிறைபிடித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் முடிந்து 10 மாதங்களாகியும் இதுவரை எந்த வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை. இந்த பகுதியில் தெரு விளக்குகள் கூட சரிவர எரியாத நிலையில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அதிமுகவை சேர்ந்த ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஒன்றிய துணை தலைவர் திமுகவை சேர்ந்த சரவணன் மற்றும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த 15 கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின்போது ஊராட்சி ஒன்றிய தலைவர் ஐயப்பனை சிறைப்பிடித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவது தொடர்பாக உயர் அதிகாரிகள் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அவர்கள் அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.