கொரோனா ஊழல் ரூ.100 கோடி; முறைகேட்டில் மா.பா.பாண்டியராஜன் !’- ஆவடி மாநகராட்சி ஊழலை அம்பலப்படுத்தும் சா.மு.நாசர்

“அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஆவடி மாநகராட்சியின் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து வருகிறார். கொரோனா நேரத்தில் 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது” என்று திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் நகராட்சிகளாக இருந்த பல நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக அரசு. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, ஆவடி எம்எல்ஏவாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் இருந்து வருகிறார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான திருச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன் மாநகராட்சி ஆணையராக இருந்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களில் 3 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகவும், டெங்கு காலம் முதல் கொரோனா பாதிப்பு வரை 100 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர்.

இது குறித்து ஆவடி சா.மு.நாசர் கூறுகையில், “ஆவடி நகராட்சியை கடந்த ஆண்டுதான் மாநகராட்சியாக தரம் உயர்த்தியது. இந்த சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக உள்ள அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்து 13 உதவியாளர்களை நியமித்தார். அவர்கள் மூலம் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து வருகிறார். தனக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் டெங்குவிற்காக ஊழியர்களை பணியமர்த்தினார். 500 பேர் என கணக்கு காட்டி 250 பேரை வைத்து பணி செய்த வகையில் 27 லட்ச ரூபாய் மாதத்திற்கு மாபா அறக்கட்டளை வருவாய் ஈட்டியுள்ளது. இதேபோல் கொரோனாவிற்கு மாஸ்க் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்துள்ளார். அரசு வழங்கும் இலவச வேட்டியில் மாஸ்க் தயாரித்து, ஒரு மாஸ்க் 6 ரூபாய் என விற்பனை செய்து வாரத்திற்கு 50 ஆயிரத்துக்கு மாஸ்க் வழங்கிவிட்டு 2 லட்சம் வரை போலியான பில்களை தயாரித்து ஊழல் செய்துள்ளனர்.

கிருமி நாசினி வாங்கியதில் ஊழல், காய்கறிகளை வழங்க வாகனங்களை ஒப்பந்தம் செய்ததில் ஊழல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை தகடுகள் கொண்டு மூடியதில் ஊழல், சாலைகள் அமைத்ததில் ஊழல் என ஊழலில் உறைவிடமாக ஆவடி மாநகராட்சி இருக்கிறது. இதுவரை மூன்று மாதத்தில் மூன்று கோடி வரை அமைச்சர் பாண்டிராஜனும், அவரது பினாமியான பாண்டியனும் ஊழலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த ஊழலுக்கு துணை போகாத ஆணையரை மாற்றிவிட்டு புதிய ஆணையரை நியமித்துள்ளார் பாண்டியராஜன். புதிய ஆணையரும் முறைகேடான பில்களை பாஸ் செய்ய முடியாமல் திணறி வருகிறார். ஆவடியில் கொரோனாவை வைத்து 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது. அவற்றை ஆதாரங்களுடன் விரைவில் வெளியிட உள்ளேன்” என்று கூறினார்.

Most Popular

’கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனிப்பாதை கூடாது’ மத்திய அரசு

கொரோனா நோய்த் தொற்று கடந்த ஐந்து மாதங்களாக இந்தியாவைப் படாத படுத்தி வருகிறது. லாக்டெளன் அறிவித்தும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் ரஷ்யா கொரோனா தடுப்பு மருந்து கண்டறிந்துவிட்டதாக அறிவித்துவிட்டது. பதிவு...

பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியனது....

 இந்த உலகம் வலதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அல்ல – #LefthandersDay

’எதைக் கொடுத்தாலும் வலதுக்கையால்தான் கொடுக்கணும்’ என்று சின்னக் குழந்தையிலிருந்து சொல்லிக்கொடுத்திருப்பார்கள். இந்தப் பழக்கம் என்பது மிக ஆழமாக எல்லோரின் மனதிலும் பதிந்துவிட்டது. அதனால் பெரிய சோகம் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஒரு...

“கணக்கு போடாம, கண்ட படத்தை போடறீங்களே சார் ” பாடம் நடத்தாமல் பலான படம் காமித்த ஆசிரியர் -படம் பார்த்த மாணவன் ஆசிரியர் மீது புகார்.

ஒரு ஆசிரியர் தன்னிடம் ட்யூஷன் படிக்க வந்த மாணவனுக்கு ,பாடம் நடத்தாமல் தினமும் பலான படத்தை காமித்துக்கொண்டிருந்ததால் கடுப்பான மாணவன் அவர் மீது போலிஸில் புகார் கொடுத்தான். உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பாரா...
Do NOT follow this link or you will be banned from the site!