ஊழல் புகார்… பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர் ராஜினாமா!

 

ஊழல் புகார்… பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர் ராஜினாமா!

பரபரப்பு செய்திகளுக்குப் பஞ்சமே இல்லாதது பாகிஸ்தான். இப்போதும் அப்படியான ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் 2018 ஆம் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து பாகிஸ்தான் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்து வருகிறார். இவரின் உதவியாளராக இருப்பவர் அசிம் சலீம் பஜ்வா. இவர் லெப்டினெண்ட் ஜெனராக இருந்து ஓய்வு பெற்றவர். இம்ரான்கானின் நிழலாகச் செயல்பட்டவர் சலீம்.

ஊழல் புகார்… பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர் ராஜினாமா!

நாட்டின் பிரதமரின் உதவியாளர் எனும் பெரும் செல்வாக்கோடு இருந்ததால் இவர் மீது பல புகார்களும் அவ்வப்போது எழுவதுண்டு. பத்திரிகை ஒன்றில், சலீம் பஜ்வாவும் அவரின் குடும்பத்தினரும் சேர்த்திருக்கும் பெரும் சொத்துகளைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு சொந்தமான மால்கள், 100க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. பாகிஸ்தானைக் கடந்தும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளி இவர்களின் சொத்து பட்டியல் நீள்கிறதாம். சலீம் பஜ்வாவின் குடும்பத்தினரின் சொத்துகள் அனைத்துமே, இவர் அதிகாரத்தை தவறாகப் பிரயோகப்படுத்தி சம்பாதித்தது என்றும் கூறப்படுகிறது.

ஊழல் புகார்… பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர் ராஜினாமா!

பாகிஸ்தானின் தற்போதைய அனல்கக்கும் பேசுபொருளே சசிம் சலீம் பஜ்வாவின் ஊழல் பற்றிதான். பலரும் இம்ரான்கான் இதை ஏன் கண்டிக்கவில்லை என்று காத்திரமாக பேசுகின்றனர்.

பிரதமருக்கு எதிராக கொடிபிடிக்க எதிர்கட்சிகளுக்கு கிடைத்த பெரிய ஆயுதமாக இது சொல்லப்படுகிறது.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கிறார் அசிம் சலீம் பஜ்வா. இந்நிலையில் நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அசிம் சலீம் பஜ்வா தானாக ராஜினாமா செய்தாரா… இல்லை இம்ரான்கான் தந்த அழுத்தத்தால் ராஜினாமா செய்தாரா என்பது போகப்போகத்தான் தெரியும். ஆனால், இந்த விஷயம் பாகிஸ்தான் பிரதமருக்குப் பெரும் தலைவலியை உருவாக்கி விட்டது என்பது மட்டும் நிஜம்.