குடிப்பதைக் குறைக்க மாநகராட்சி அட்வைஸ்… எங்கே கிடைக்கும் என்று கேட்கும் மது குடிப்போர் சங்கம்!

 

கொரோனா காலத்தில் மது அருந்துவதை தவிர்த்துவிடுங்கள், முடியாதவர்கள் குடிப்பதை குறைத்துக்கொள்ளுங்கள் என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டிருந்த அறிவுரை பதிவுக்கு மது குடிப்போர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

http://


கொரோனா பரவலைத் தடுக்க ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சென்னை மாநகராட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அட்வைஸ் செய்திருந்தது. அதில் ஒரு ஆலோசனையாக மது அருந்துவதை நிறுத்திவிடுங்கள், அல்லது குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தது.

குடிப்பதைக் குறைக்க மாநகராட்சி அட்வைஸ்… எங்கே கிடைக்கும் என்று கேட்கும் மது குடிப்போர் சங்கம்!இது குறித்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் கூறுகையில், “அளவாக மது அருந்துங்கள் என அக்கறை காட்டிய சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகத்தின் பதிவை, எங்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம். அதே சமயத்தில் அளவாக மது அருந்துங்கள் என்று சொல்லும் மாநகராட்சி நிர்வாகத்தின் விழிப்புணர்வை நாங்கள் மதிக்கத் தயாராக இருந்தாலும், சென்னையில் மது எங்கே கிடைக்கிறது என்பதையும் மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

குடிப்பதைக் குறைக்க மாநகராட்சி அட்வைஸ்… எங்கே கிடைக்கும் என்று கேட்கும் மது குடிப்போர் சங்கம்!சென்னையில் மது விற்கப்படாத நிலையில், அளவாக அருந்துங்கள் என்று கூறினால் நாங்கள் என்ன செய்வது? அளவாக அருந்துவதற்கு மது கிடைக்காமல் சென்னை மாநகராட்சி பகுதியில் இருக்கும் லட்சக்கணக்கான மது குடிப்போர் வருத்தத்தில் உள்ளோம் என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்யக் கடமைப் பட்டுள்ளோம்” என்றார்.
இதற்கிடையே அளவாக அருந்துங்கள் என்ற தகவல் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, சென்னை மாநகராட்சி அந்த பதிவை நீக்கியுள்ளது.