சென்னையில் அக்டோபர் மாதம் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 

சென்னையில் அக்டோபர் மாதம் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை: சென்னையில் அக்டோபர் மாதம் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் என்று புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கொரோனோ வைரஸ் தொற்றுநோய் வருகிற அக்டோபர் மாதம் உச்சத்தை தொடும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் முதல் ஒரு மாதம் கழித்து மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கொரோனா பரவல் உச்சம் பெறும் என்று தெரியவந்துள்ளது. சென்னையில் கொரோனா பரவல் உச்சம் அடைந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு தொற்றுநோய் பரவல் குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் அக்டோபர் மாதம் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஆனால் கொரோனா பரவல் குறைவது மக்களைப் பொறுத்தது ஆகும். ஏனெனில் முகமூடி அணிவது, சமூக விலகல் மற்றும் கை சுகாதாரம் போன்ற நடவடிக்கைகள் பின்பற்றப்படாவிட்டால் கொரோனா பரவல் உச்சம் பெறும் என்று கூறப்படுகிறது.

சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் நடந்து வரும் 12 நாள் ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்றுநோய் பரவல் உச்சம் பெறுவது 2 முதல் 3 வாரங்கள் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் கொரோனா பரவல் உச்சம் பெறுவது அக்டோபர் பிற்பகுதி அல்லது நவம்பர் மாத தொடக்கத்திற்கு தள்ளிப் போகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.