தமிழகத்தில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா பாதிப்பு? இன்றைய பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா பாதிப்பு? இன்றைய பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 27 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 46ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

தமிழகத்தில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா பாதிப்பு? இன்றைய பாதிப்பு நிலவரம்

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 28,978பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14லட்சத்து 09ஆயிரத்து 237ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,52,389 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 267பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 16,925பேர் ஆண்கள், 12,053பேர் பெண்கள். சென்னையில் ஒரேநாளில் 7149 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா பாதிப்பு? இன்றைய பாதிப்பு நிலவரம்

இன்று 232 பேர் உயிரிழந்துள்ளார். 98 பேர் தனியார் மருத்துவமனையிலும், 134 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,880ஆக அதிகரித்துள்ளது. இன்று 20,904 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,40,968ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.