Home தமிழகம் தமிழகத்தில் மேலும் 596 பேருக்கு கொரோனா, 9பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 596 பேருக்கு கொரோனா, 9பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 9கோடியே 62 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 20 லட்சத்து 6ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

This image has an empty alt attribute; its file name is Coronavirus-reuters-S.jpg

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 592 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 33 ஆயிரத்து 011 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 5,196 ஆக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 61,023 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 54லட்சத்து 53ஆயிரத்து 541ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 366பேர் ஆண்கள், 230 பேர் பெண்கள். தமிழகத்தில் 252 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இன்று மட்டும் மொத்தம் 9பேர் உயிரிழந்துள்ளனர். 6பேர் தனியார் மருத்துவமனையிலும், 3பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,299 ஆக அதிகரித்துள்ளது. இன்று 705பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 15ஆயிரத்து 516ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

மாவட்ட செய்திகள்

Most Popular

கூட்டணி கட்சிகளுக்கு அள்ளிக்கொடுத்த கமல்! நள்ளிரவில் கையெழுத்தான ஒப்பந்தம்!!

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பல நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை நள்ளிரவில் முடிவுற்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம்...

திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்… டைம்ஸ்நவ் சிவோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு முடிவு

டைம்ஸ் நவ் சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தல் இறுதி முடிவுக்கும், வேறுபாடு இருக்காது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய என இரு கருத்துக்கணிப்புகளையும் அந்நிறுவனங்கள் வெளியிடும். கிட்டத்தட்ட அவற்றின் கருத்துக்கணிப்பின்படியே...

சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கும் சின்னம்மா பேரவை அமைப்பினர்!

அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயல‌லிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் அறிக்கை என சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “நான் என்றும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ, ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின்...
TopTamilNews