கடந்த 24 மணி நேரத்தில் 1,908 பேருக்கு கொரோனா!

 

கடந்த 24 மணி நேரத்தில் 1,908 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.17 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.25 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,908 பேருக்கு கொரோனா!

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,908 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,104பேர் ஆண்கள், 804 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 65ஆயிரத்து 452ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 20ஆயிரத்து 217ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 28 பரிசோதனை மையங்கள் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 1,908 பேருக்கு கொரோனா!

இன்று 29பேர் உயிரிழந்துள்ளார். 6பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 23பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 159ஆக அதிகரித்துள்ளது. இன்று 2,047 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 11 ஆயிரத்து 076ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.