வெஸ்டன் கழிவறை பயன்படுத்திரீங்களா! அதுமூலவும் கொரோனா பரவும்!! எச்சரிக்கை

வெஸ்டன் கழிவறையின் மூலமும் கொரோனா நோய்த் தொற்று பரவலாம் என சீனாவில் உள்ள யாங்ஜோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக 3 லட்சத்து 55ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1ம்87,718பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி உள்ளனர். கொரோனா தொற்றால் நாட்டில் 11,922 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில், இந்த வருடம் முடிவதற்குள் நாட்டின் மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு (அதாவது 67 கோடி பேர்) கொரோனா தொற்று பரவும் என்று தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நோய்த் தொற்றுள்ள ஒருவரின் செரிமான மண்டலத்தில் உயிர்வாழும் வைரஸ் அவர் கழிக்கும் மலத்தில் வழியாக பரவலாம் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது. ஒரு கழிவறையில் நீர் மற்றும் காற்றின் ஓட்டம் அதன்மூலம் தெறிக்கும் நீர்த்துளிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதனை விஞ்ஞானிகள் “டாய்லெட் ப்ளூம் ஏரோசல்” என்று குறிப்பிட்டுள்ளனர். வெஸ்டன் கழிவறைகளில் ஃப்ளஷ் செய்யும்போது அது ஒரு பெரிய கொந்தளிப்பை உருவாக்குகிறது. அதில் கண்களுக்குப் புலப்படாத மலத்தின் துகள்கள் காற்றில் வீசப்படுகின்றன. ஆகவே அவை சுவரில் ஒட்டிக் கொண்டு உயிர் வாழலாம். நோயாளியை அடுத்து கழிவறைக்குள் வருபவர் அந்தக் காற்றை சுவாசிக்க நேரலாம் என விளக்கப்பட்டுள்ளது. ஆகவே நீரை கழிவறையில் பாய்ச்சும்போது அதன் மூடியை சாத்திவிட்டு பின்பு நீரை செலுத்துவது நல்லது எனக் கூறப்பட்டுள்ளது. அதன்பின் கிருமி நாசினிகளைப் போட்டு சுத்தப்படுத்திவிட்டு பயன்படுத்த வேண்டும் என்றும் யாங்ஜோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் ஜி-சியாங் வாங் கூறியுள்ளார்.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!