கொரோனா பயம்: 57 வயதிற்கு மேற்பட்ட 99 காவலர்களுக்கு ஓய்வு!

 

கொரோனா பயம்: 57 வயதிற்கு மேற்பட்ட 99 காவலர்களுக்கு ஓய்வு!

மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில் உடல்நிலை சரியில்லாத மேலும் வயதான காவலர்களுக்கு ஓய்வளிக்கும் திட்டம் புதிய காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா நடைமுறைப்படுத்தியுள்ளார்.

சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்களால் மதுரை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக மதுரையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதனையடுத்து நகரிலுள்ள 24 காவல் நிலையங்களிலும் பணிபுரியும் 57 வயதுக்கு மேற்பட்டோர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. 2 காவல் ஆய்வாளர்கள், 1 ஆயுதப்படை ஆய்வாளர், 71 காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 22 காவல் உதவி ஆய்வாளர்கள், 3 தலைமைக் காவலர்கள் என, 99 பேர் தேர்ந்தடுக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பயம்: 57 வயதிற்கு மேற்பட்ட 99 காவலர்களுக்கு ஓய்வு!

இவர்களில் யாருக்கெல்லாம் உடல்நலம் சரி யில்லையோ அவர்களை தேர்வு செய்து, உரிய மருத்துவ சிகிச்சை, தேவையான ஓய்வு வழங்க காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா திட்டமிட்டுள்ளார். மேற்கண்ட காவலர்களுக்கு முழு உஅல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு சிறப்பு சிகிச்சையும் இல்லாவதற்கு வீட்டிலிருந்து ஓய்வெடுக்கவும் அனுமதி வழங்கப்படவுள்ளது. காவல் ஆணையரின் இந்த நடவடிக்கை மதுரை நகர் காவல்துறை மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.