உலகளவில் கொரோனா தொற்றால் நிலைமை மோசமடைந்து வருகிறது – உலக சுகாதார அமைப்பு

 

உலகளவில் கொரோனா தொற்றால் நிலைமை மோசமடைந்து வருகிறது – உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் நிலைமை மோசமடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

அமெரிக்காவில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கறுப்பின நீதிக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா பரவும் சாத்தியக்கூறுகள் கூடிக் கொண்டே செல்கிறது. இதனால் பாதுகாப்பான முறையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் நாவல் கடந்த டிசம்பரில் சீனாவில் பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை 70 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. அதில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பலியாகினர். கிழக்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய கண்டங்கள் கொரோனா நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

உலகளவில் கொரோனா தொற்றால் நிலைமை மோசமடைந்து வருகிறது – உலக சுகாதார அமைப்பு

ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்ற போதிலும், உலகளவில் கொரோனா தொற்றால் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனீவாவில் நடந்த ஒரு மெய்நிகர் செய்தி மாநாட்டில் கூறினார்.

கடந்த 10 நாட்களில் 9 நாட்கள் தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொரோனா தொற்று தாக்கியுள்ளது. நேற்று உலகில் 136,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஏற்பட்ட கொரோனா வழக்குகளில் கிட்டத்தட்ட 75 சதவீதம் வெறும் 10 நாடுகளிலிருந்து வந்தவை ஆகும். அதிலும் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் தெற்காசியாவில் தான் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.