“கொரோனாவின் பெயரை நியூமராலஜிபடி மாற்றுங்கள்! ஓடிவிடும்”

 

“கொரோனாவின் பெயரை நியூமராலஜிபடி மாற்றுங்கள்! ஓடிவிடும்”

நியூமராலஜிபடி, Corona-வை Caronaa என்று மாற்றுங்கள் என ஆனந்தராவ் என்ற ஸ்டெனோகிராபர் போஸ்டர் அடித்து ஒட்டிய சமபவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

“கொரோனாவின் பெயரை நியூமராலஜிபடி மாற்றுங்கள்! ஓடிவிடும்”

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டிச் செல்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஆனந்தராவ் என்ற ஸ்டெனோகிராபர், நியூமராலஜிபடி, கொரோனா, கோவிட்டின் ஸ்பெல்லிங்கை, Caronaa, covviyd 19 என்று மாற்றுங்கள், அந்த பெயரை பொது இடங்களில் பயன்படுத்தினால் ஆந்திராவின் ஆனந்தரம் பகுதியில் மட்டுமல்லாமல், உலகை விட்டே கொரோனா சென்றுவிடும் என்று ஆனந்த ராவ் என்பவர் வைத்துள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது.