இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது!

 

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு  2 லட்சத்தை நெருங்குகிறது!

இதுவரை உலகம் முழுவதும் 63 லட்சத்து 66 ஆயிரத்து 193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3லட்சத்து 77 ஆயிரத்து 437 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 29 லட்சத்து 3 ஆயிரத்து 605 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு  2 லட்சத்தை நெருங்குகிறது!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு  2 லட்சத்தை நெருங்குகிறது!

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,90,535 லிருந்து 1,98,706 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 97,581பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,598 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.