கர்நாடகாவில் கொரோனாவால் இறந்தவர்களை குவியல் குவியலாக குழிக்குள் வீசும் ஊழியர்கள்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை கர்நாடக சுகாதாரத்துறை ஊழியர்கள் குழிக்குள் தூக்கி வீசி சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மனிதாபிமானமற்ற முறையில் வீசும் அவலம் திருச்சி மற்றும் புதுச்சேரியில் அரங்கேறியது. இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் இதேபோன்று அடக்கம் செய்யும் நிகழ்வு வீடியோவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பெல்லாரி மாவட்டத்தில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில் சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டு, அங்கு கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இறந்தோரின் உடல்களை துப்புரவு பணியாளர்கள், அவமதிக்கும் விதத்தில் அடக்கம் செய்து வருகின்றனர். உடலை தரத்தரவென இழுத்து குழிகளில் தூக்கிப்போட்டு புதைக்கின்றனர். இந்நிலையில்தான் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இதுவரை 14,295 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 226 பேர் உயிரிழந்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.71 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. இந்த வாரத்தின் முதல் 2 தினங்களில் வர்த்தம் முதலீட்டாளர்களை ஏமாற்றியது. இருப்பினும் அதற்கு அடுத்த 3 நாட்களில் பங்கு...

ஊரடங்கால் வீட்டில் முடங்கினாலும் உடல்நலனில் அக்கறை தேவை!

ஊரடங்கு... எல்லோர் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் மாதக்கணக்கில் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறது. முதல்நாள் பார்த்த தன் தந்தையின் முகத்தை மறுநாள் காலையில் பார்த்த பிள்ளைகள் இப்போது நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்....

கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி அறிமுகம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ வார்டில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைத்து செல்வதற்காக...

ரத்தசோகை போக்கும் முளைக்கீரை வடை!

கீரை வடை... டீக்கடைகளிலும், ஹோட்டல்களிலும் சாப்பிட்ட இந்தக் கீரை வடையை வீடுகளிலும் செய்து சாப்பிடலாம். இன்றைய சூழலில் சுகாதாரமான, சுத்தமான உணவு கிடைக்குமா? என்ற ஏக்கம் உள்ளது. எனவே, நம் வீடுகளில் இந்தக்...
Open

ttn

Close