கொரோனா வைரஸ் தொற்று இன்னும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது – உலக சுகாதார அமைப்பு

 

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது – உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: கொரோனா வைரஸ் தொற்று இன்னும் வேகமாக பரவிக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 4 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 90 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 48 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று இன்னும் வேகமாக பரவிக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது – உலக சுகாதார அமைப்பு

இதுகுறித்து அவர் பேசுகையில், “நாம் அனைவரும் ஒன்றுபட்டால் தான் இந்த தொற்றுநோயை தோற்கடிக்க முடியும். தொற்றுநோயை அரசியல்மயமாக்குவதால் அதன் பரவல் அதிகமாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இன்னும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. நாம் யாரும் பாதுகாப்பாக இல்லை. இந்த தொற்றுநோய் சுகாதார நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, சமூக நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளை கொடுத்துள்ளது. கொரோனா தொற்றுநோயின் விளைவுகள் வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு உணரப்படும்” என்றார்.