கொரோனாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பு மருந்து கண்டுபிடித்தது!

 

கொரோனாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பு மருந்து கண்டுபிடித்தது!

உலகையே ஆட்டி படைத்து வரும் தொற்று நோயான கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பிடிக்கும் பணியில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா மற்றும் இந்தியா உள்பட உலகின் பல முன்னணி நாடுகள் தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி கண்டுபிடிப்பில் கடந்த மார்ஸ் மாதமே முதல் கட்டத்தை அடைந்தது.

கொரோனாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பு மருந்து கண்டுபிடித்தது!

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள வைரல் வெக்டார்டு தொழில்நுட்பம் சிறந்து விளங்குவதால், கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக முடிவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இறுதுகட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. 1077 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது சோதனையில் உறுதியானது. 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி பாதுகாப்பாகவும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பு ஊசி மூலம் ஆன்டிபாடிகள் மற்றும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடக்கூடிய வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது.