மூடப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம்…தவித்து போன பயணிகள்!

 

மூடப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம்…தவித்து போன பயணிகள்!

இரவு நேர ஊரடங்கு காரணமாக நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

மூடப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம்…தவித்து போன பயணிகள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 10 ஆயிரத்து 986 பேருக்கு வெற்றி இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் குரல் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 13 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்த நிலையில்கொரோனாவால் உயிரிழந்தவர்க்ளின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.இந்த சூழலில் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இரவு 10 மணிமுதல் காலை 4 மணிவரை ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மக்கள் நடமாட்டம் இருக்கிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் 200 இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர்.

மூடப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம்…தவித்து போன பயணிகள்!

இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக நேற்று இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு முதல் அமலுக்கு வந்தது. இரவு நேர ஊரடங்கால் பொது/தனியார் போக்குவரத்து, வாடகை டாக்சி, ஆட்டோ இயங்காது என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 6 நுழைவாயில்களும் மூடப்பட்டன. இதனால் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்காததால், பயணிகள் சென்னையின் மற்ற இடங்களுக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையத்திலேயே படுத்துத்தூங்கினர். இரவு நேரத்தில் கூட பகல் போல காட்சியளிக்கும் கோயம்பேடு பேருந்து நிலையம் இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்டது.