இந்தியாவுக்குள் நுழைந்த உருமாறிய கொரோனா!? உறுதி செய்த மத்திய அரசு

 

இந்தியாவுக்குள் நுழைந்த உருமாறிய கொரோனா!? உறுதி செய்த மத்திய அரசு

பிரிட்டனில் உருமாற்றமடைந்த வீரியமிக்க கொரோனா பரவி வருகிறது. இது முந்தைய கொரோனாவை விட 70% அதிவேகமாக பரவ கூடியது. பிரிட்டனில் இந்த வைரஸ் அதிவேகமாக பரவிவருவதால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.

பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு வந்த 13 நபர்களுக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு புதிய கொரோனா திரிபு பாதிப்பு உள்ளதா என்பதை அறிய பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்காக தமிழகத்திலிருந்து 13 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தியாவுக்குள் நுழைந்த உருமாறிய கொரோனா!? உறுதி செய்த மத்திய அரசு

இதுகுறித்து ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை புனே ஆய்வறிக்கை குறித்து ஆலோசனை நடத்தியது. பரிசோதனை முடிவில், பிரிட்டனில் இருந்து வந்த நபர்களில் 4 பேரின் மாதிரிகளில் வித்தியாசம் உள்ளது என புனே நிறுவனம் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து 2வது பபரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது. 2வது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு ஆலோசனை நடத்தி இது உருமாற்றமடைந்த கொரோனாவா என மத்திய அரசி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் போன்று அனைத்து மாநில மாதிரி முடிவுகளை பெற்ற பிறகே தொற்று எந்த வகை உருமாற்றமடைந்துள்ளது என்பது பற்றி தெரியவரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.