இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது!

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு  7 லட்சத்தை தாண்டியது!

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 17 லட்சத்து 39 ஆயிரத்து 169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 40 ஆயிரத்து 660 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 66 லட்சத்து 41 ஆயிரத்து 866 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு  7 லட்சத்தை தாண்டியது!

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு  7 லட்சத்தை தாண்டியது!

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 6,97,413 லிருந்து 7,19,665 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4, 39, 948 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20, 160 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் 22, 252 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 467 பேர் பலியாகியுள்ளனர்.